கொரோனாவின் பிடியில் ஈரான்… பலியானோரின் எண்ணிக்கை 988 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக உயிர்பலி வாங்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் நாளுக்குநாள் உயிர்பலி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 988 அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 853 பேர் பலியான நிலையில் தற்போது 135 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16, 169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.