காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை விடப்பட்டன.இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் கடந்த ஐந்தாம் தேதி முதல் முடக்கப்பட்டு இருந்த தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுமார் 50,000 தொலைபேசி இணைப்புகள் செயல்பட ஆரம்பித்துள்ளது.