அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை ஒடிசா கடற்பகுதியை ஃபானி நெருங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.