கலிபோர்னியாவில் மதுபான பிரியர்களை கவரும் ‘ராட் பார்’…!!

கலிபோர்னியா மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி அங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சான் பிரான்சிஸ்கோவின் டன்ஜியன் என்ற பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும்  இடமாக உள்ளது. இங்கு புதிதாக ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி ஓன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த விடுதிக்கு வருபவர்களுக்கு எலி வால் போன்ற பீட்ரூட் வேர் ஊறிய மதுபானம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள அனைவருமே இருட்டறையில் பராமரித்து வளர்க்கப்பட்டு வரும்  எலிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Image result for A Night at the Rat Bar, San Francisco's Newest Instagram Trap

மேலும் அதனை செல்லபிராணிகளை போல கொஞ்சி விளையாடவும், செல்பி  எடுத்து மகிழவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த மதுபான விடுதிக்கு எலிகளுடன் விளையாடுவதற்காகவே அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். அவர்கள் வீட்டில் இது போன்ற  உயிரினங்களை பராமரிக்க முடியாது என்பதால் இங்கு வந்து மகிழ்ந்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.