இந்திய அளவில் அலறவிடும் அஜித் ரசிகர்கள்…. ட்ரெண்டாகும் “நேர்கொண்ட பார்வை”..!!

அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது 

அஜித்நடிப்பில் உருவாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படமானது இன்று (ஆகஸ்ட் 08) வெளியாகியுள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Image

இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரீமேக் ஆகவே இருந்தாலும் தல அஜித் நடித்திருப்பதால் தமிழகத்தில்  இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  அதற்கு சாட்சியாக ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் #NerKondaPaarvaiFdfs, #NerKondaPaarvaiFromToday ஆகிய ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேர்கொண்ட பார்வை தொடர்பாக மட்டுமே இதில் பதிவிட்டு ட்விட்டரை தெறிக்க விடுகின்றனர்.

Image result for #NerKondaPaarvaiFdfs