75-வது சுதந்திர தினம்… உலக நாடுகளில் ஜொலிக்கும் தேசியக்கொடி…. கோலாகலமான கொண்டாட்டம்….!!

சுதந்திரம் தினம் அன்று பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்கள், பெரிய புகழ் பெற்ற 75-கட்டிடங்கள் முவர்ணத்தின் வெளிச்சத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, உலக முழுவதுமாக அமைந்திருக்கும் இந்தியத் தூதரகங்கள் அனைத்தும் 75-ஆவது சுதந்திர தினம் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதில் இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் 75 முக்கிய சுற்றுலாப் பகுதி மற்றும் கட்டிடங்களில் இன்று மாலை நேரம் முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை வரை முவர்ணத்தில் பிரகாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அது மட்டுமின்றி உலகப் புகழ் வாய்ந்த நயாகரா அலைகள் மற்றும் கனடாவில் இருக்கும் நீர்வீழ்ச்சி போன்றவையும் மூவர்ணத்தில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூவர்ணத்தின் விளக்குகளால் ஒளிரும் முக்கிய கட்டிடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், யுனைடெட் ஸ்டேட்ஸ் இருக்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், ரஷ்யாவில் இருக்கும் பரிமாண கோபுரம், அபுதாபியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அட்னோக் குழு கோபுரம், துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீபா, இங்கிலாந்தில் இருக்கும் பர்மிங்காமின் புகழ்வாய்ந்த நூலக கட்டிடம் ஆகியவை அடங்கும்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் சுதந்திரத்தின் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட பெருமையான நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக வெளிநாடுகளில் வாழும் ஏராளமான இந்திய மக்கள் முழு ஆர்வத்துடன் நடைபெறும் ஏற்பாடுகளில் பங்கு வகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *