பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கை தீர்மானித்தது மும்பை அணி….!!

 மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.    

ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில்  சாஹல் பந்து வீச்சில்  டிகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித் சர்மா 48 (33),  சூரியகுமார் யாதவ் 38 (24), யுவராஜ் சிங் 23 (12),ரன்கள் குவித்தனர்.

 

இதையடுத்து வந்த பொல்லார்ட் 5, குருனால் பாண்டியா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 32 (14) ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாட உள்ளது.