சென்னை அணிக்கு முதல் தோல்வி….. மும்பை அணி அபார வெற்றி…!!

மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது.    

12வது  ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  விளையாடியது . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 (43),  க்ருனால் பாண்டியா 42 (32), ஹர்திக் பாண்டியா 25 (8),  பொல்லார்டு 17 (7), ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து    களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133  ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 58 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள்  ரெய்னா 16, தாகூர்  12* தோனி 12, பிராவோ 8, தீபக் சாஹர் 7,  வாட்சன் 5, ராயுடு 0   என அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக மலிங்கா, பாண்டியா, ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜேசன் ரெண்டாரஃப்  2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.