மாத சம்பளம் ரூ 51,490 வரை…… சிண்டிகேட் வங்கியில் 129 பணியிடங்கள்…..!!

சிண்டிகேட் வங்கியில் பல்வேறு பணிக்கு 129 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் என்ற இரு பிரிவுகளின் கீழ் 129 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணிகள் :

சீனியர் மேனேஜர் (Risk Management)

மேனேஜர் (Risk Management)

மேனேஜர் (Law)

மேனேஜர் (Audit)

செக்யூரிட்டி ஆபீஸர்

காலிப்பணியிடங்கள் :

சீனியர் மேனேஜர் (Risk Management) 05

மேனேஜர் (Risk Management) 50

மேனேஜர் (Law) 41

மேனேஜர் (Audit) 03

செக்யூரிட்டி ஆபீஸர் 30

சிண்டிகேட் வங்கி க்கான பட முடிவு

விண்ணப்பிக்கும் தேதி :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி 18.04.2019

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 18.04.2019

சம்பளம் :

சீனியர் மேனேஜர் பணிக்கு  31 , 701 முதல் அதிகபட்சமாக 45, 950 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

மற்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் 40,020 முதல் அதிகபட்சமாக 51,490 மாத சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு :

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வரை இருத்தல் வேண்டும். செக்யூரிட்டி ஆபீசர் பணிக்கு மட்டும் அதிக பட்சம் 45 வரை  இருக்கலாம் .

தேர்வு கட்டணம் :

S/C , S/T எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 100+GST

பொதுப்பிரிவு மற்றும் OBC_க்கு ரூபாய்  600 + GST

தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். செலுத்திய தேர்வு கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட இயலாது.

கல்வித்தகுதி :

சீனியர் மேனேஜர் (Risk Management)  பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியல் படிப்புடன் M.B.A ( பேங்கிங் , பைனான்ஸ்) பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் மூன்று வருட வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் .

மேனேஜர் (Risk Management)பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியல் படிப்புடன் M.B.A ( பேங்கிங் , பைனான்ஸ்) பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 1 வருட வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சிண்டிகேட் வங்கி க்கான பட முடிவு

மேனேஜர் (Law) பணிக்கு இளங்கலை சட்டம்  பட்டப்படிப்பை பயின்று குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் (Audit ) பணிக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்று கூடுதலாக CISA/ OSCP / CEH போன்ற சான்றிதழ் படிப்பையும் அத்துடன் குறைந்தபட்சம் நான்கு வருடம் துறை சார்ந்த பணி அனுபவம் அவசியம் .

செக்யூரிட்டி ஆபீஸர்  பணிக்கு இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 5 வருடம் அதிகாரி பணியோ  அல்லது 5 வருடம் போலீஸ் அதிகாரியாகவோ பணியாற்றியவர் இந்த பணிக்கு தகுதியானவர் .

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/synvpbkmar19/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு நடைபெறும் முறை :

4 பிரிவுகளின் கீழ் 200 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு 2.30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும் இதுகுறித்த முழுமையான தகவல்களுக்கு  https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கலாம் .

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *