காணாமல் போன பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் சடலமாக மீட்பு..!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல்  மற்றும்  செயற்கை நுண்ணறிவியலில்  எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க  சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை.

Image result for The missing BJP leader's son was found dead in England

 

இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக லண்டன் போலீசாரை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது கடற்கரை அருகே அவரது பை  கிடந்தது என்று  போலீசார் தெரிவித்தனர்.

Image result for The missing BJP leader's son was found dead in England

இந்நிலையில்  காணாமல் போன உஜ்வால் ஸ்ரீஹர்ஷா பிரிட்டனில் உள்ள  கடற்கரையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்தான் என உடலை அடையாளம் காட்டி உறுதி செய்தனர். இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது  தற்கொலையா அல்லது கொலையா என்ற காரணம் குறித்து தெரியவில்லை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.