டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் – வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

வாகனங்களின் பர்மிட், ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

கொரோனாவால் சான்றுகள் புதுப்பிக்கப்படாத நிலையில் டிசம்பர் 31 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *