கடுப்பில் தூக்கி எறிந்த அமைச்சர்…..! செம அப்செட்டில் C.M ஸ்டாலின்… தர்மசங்கடத்தில் DMK தலைமை!!

பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்த அதிமுக 202 1-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து, பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணையில் ஏறிய திமுக, முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுக ஆட்சி அமைந்த உடன் திராவிட மாடல், திராவிட மாடல் அரசு என்ற வார்த்தையை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பேசி வந்தனர். இதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் முந்தைய கால திமுக போல ரவுடித்தனம், அராஜகம் என்று தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள்.

 

பல இடங்களில் அடிக்கடி அராஜக சம்பவங்களும் அரங்கேறிய நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக பொதுக்கூட்டத்தில் இதனை வெளிப்படுத்தினார். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காலையில் எழுந்ததும் யார் ஏதேனும் பிரச்சினை செய்துவிடுவார்களோ,  அமைச்சர்கள் ஏதாவது பேசி விடுவார்களோ, அமைச்சர்கள் செயல்பாடுகள் ஏதும் விமர்சிக்கப்பட்டு விடுமோ என்று தினமும் பயந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கருத்து எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் வழங்கி இருந்தார். அமைச்சர்கள் பொதுஇடங்களில் கவனமாகவும், நிதானத்துடனும் செயல்படவேண்டும் என்று கண்டிப்புடன் கூடிய அறிவுரை வழங்கி இருந்தார். அனாலும் முதல்வரின் அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்ட கதையாக இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டரை கல் தூக்கி எறிவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

திருவள்ளூரில் நாளை மாலை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்த அமைச்சர் நாசர் உக்கார சேர் கொண்டுவர லேட் ஆகிவிட்டது என்று, கடுப்பாகி திமுக தொண்டர் மீது கல்லை தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் திமுக அமைச்சர் இது போல நடந்தது திமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மு க ஸ்டாலின் பல அறிவுரைகளை அமைச்சர்களுக்கு சொல்லியும் அவர்கள் முதல்வர் பேச்சை கேட்காமல் மீறி செயல்படுவது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பெரும் கவலை அடைய வைத்துள்ளது.

Leave a Reply