மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு… 2,35,000 கன அடியாக உயர்ந்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது.

கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின்வரத்து 2.35 லட்சம் கன அடியாக  அதிகரித்துள்ளது.

Image result for mettur dam

அணையின் நீரின்  மட்டம் காலை 67 அடியாக இருந்து படிப்படியாக உயர்ந்து 90 அடியாக அதிகரித்து  தற்போது 91  அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று இரவுக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் நீர் இருப்பு  50.80 டிஎம்சி தண்ணீர் இருக்கும் நிலையில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.