அவுட்டிங் சென்ற காதலர்கள் … புழல் சிறையில் அடைத்த காவலர்கள் ..!!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில்  ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும்  புகார் அளித்தனர் .

Image result for mobile robbery image bike

இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி விசாரணை நடத்தினர் . இதனை தொடர்ந்து விசாரணையின் இறுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரில் வண்டி ஓட்டிய இளைஞர் 29 வயதானவர் .  இவர்மீது ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு உள்ளது.

Image result for mobile robbery image bike

வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்த அந்தப் பெண் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் . இவர் தாம்பரம் மாவட்டத்தில் உள்ள பாரதி பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது . பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.