கட்டுப்பாட்டை இழந்த லாரி… அந்தரத்தில் தொங்கும் காட்சி… பெரும் பரபரப்பு…!!!!!

தர்மபுரியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் பெங்களூருவில் இருந்து லாரியில் பெரிய வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி பாளையம் அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் டிரைவர் பெரியண்ணன் சாதுர்த்தியமாக செயல்பட்டு லாரியை நிறுத்தியுள்ளார்.

இதனால் லாரி பள்ளத்தில் கவிழாமல் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. இதன் காரணமாக டிரைவர் காயங்கள் இல்லாமல் தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டு உள்ளனர்.