உலகின் மிக நீளமான விமானம்…. தனது முதல் பயணத்தை தொடங்கியது..!!

உலகின் நீளமான விமானம் தன்னுடைய முதல் பயணத்தை கலிபோர்னியாவில் தொடங்கி இருக்கின்றது.

உலகிலேயே மிக நீளமான ‘ராக்’(Roc) என்ற விமானத்தை ‘ஸ்டர்டோ லான்ச்’(stratolaunch) என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த விமானமானது இரண்டு விமானங்களின் உடற்பகுதியை கொண்டது. அதோடு 6 போயிங் 747 விமானங்களின் இயந்திரங்களை கொண்டது. இந்த விமானமானது  விண்வெளியில் செயற்கைகோள்களை ஏவுவதற்காக ராக்கெட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டது.இந்த விமானம்  மூலம் எளிதில் ஓடுபாதை மட்டும் வைத்து செயற்கை_  கோள்களை இயக்க முடியும். மிகவும்  நீளமான இந்த விமானம் நேற்று  கலிபோர்னியாவின்    மோஜேவ் பாலைவனத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு முதல் முறையாக இயக்கப்பட்டது.

இவ்விமானம் மொத்தம் 2 1/2  மணி நேரத்திற்கு மேல் வானில் பறந்தது. இந்த விமானம் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 304 கிலோமீட்டர் வேகத்தில் சென்று பூமியிலிருந்து சுமார் 17ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இதுகுறித்து இந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தின் CEO  ஜீன் ஃபிலாய்ட், கூறுகையில் ,  “இது மிகவும் அருமையான பயணமாகும் ,  இன்றைய பயணம் ஒரு மிக பெரிய முயற்சியின் தொடக்கம்” என்று  தெரிவித்தார். இந்த விமானத்தின் விங் ஸ்பேன் 117 மீட்டர் ஆகும். இது அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.