துலாம் இராசிக்கு… “ஆர்வத்தோடு செயலாற்றுவீர்கள்”… முன் கோபம் ஏற்படக் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று சுபகாரியம் ஏற்படும் நாளாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆர்வத்தோடு செயலாற்றுவீர்கள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கூடுதலாகவே கிடைக்கும். இன்று செலவு கொஞ்சம் கூடும். சாதகமான பலன்கள் உங்களை தேடி வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் மட்டும் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். முன் கோபம் ஏற்படக் கூடும் அதை பார்த்துக் கொள்ளுங்கள். வீண் தகராறு ஏற்படும்.

பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை கொடுக்கும். கூடுமானவரை ரகசியத்தை பேணிக்காப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது  சிவப்பு நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சியை கொடுப்பதாக இருக்கும்.  அதே போல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *