செம ஜோடி..! தளபதி 67 படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாகும் முன்னணி நடிகை?…. வைரல் புகைப்படம்….!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி ஆகியோரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

அதன் பிறகு பகத் பாஸில் , நடிகர் கமல்ஹாசன், நடிகர் விக்ரம் போன்றோரும் படத்தில்  நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதன் பிறகு அனிருத் படத்திற்கு இசையமைக்க, நடன இயக்குனராக தினேஷ் மாஸ்டர் பணிபுரிகிறார் . இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காக தற்போது பட குழு காஷ்மீருக்கு தனி விமான மூலம் சென்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உட்பட குழுவினர் காஷ்மீருக்கு சென்றுள்ள நிலையில் அவர்களுடன் நடிகை திரிஷாவும் காஷ்மீருக்கு சென்றுள்ளார். நடிகை திரிஷா விமான நிலையத்திற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் மூலம் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.