மறைந்த விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை…. தமிழ் கற்றுக் கொடுத்ததாக உருக்கம்…. வைரலாகும் வீடியோ….!!!

மறைந்த விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.அதன்படி லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஊர்வசி ரவ்துலாவுடன் தான் நடிகர் விவேக் கடைசியாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பின்போது விவேக் அவருக்கு தமிழ் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லிக்கொடுக்கும் வீடியோவை ஊர்வசி ரவ்துலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *