நடைபாதையில் தூங்கிய பெண்… கோர விபத்தினால் நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கிய பெண் மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் சாலையோர நடைபாதையில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் வழக்கம் போல இரவு நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சாலையோர நடைபாதையில் படுத்திருந்த தேவி மீது மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த தேவியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அதே காரில் கொண்டு சென்றனர்.

அங்கு தேவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர் அதே பகுதியில் வசிக்கும் ராசி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் சாலையில் தாறுமாறாக ஓடி தேவியின் இறப்பிற்கு காரணமானது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *