செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்து மிகப்பெரிய கட்சி நாங்க என என அன்புமணி ராமதாஸ் பேசியது ஒரு பக்கம் வருத்தமும், வேதனையும் இருக்கு. ஒரு பக்கம் கடுமையான கண்டனத்தை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். ஏனென்றால் ஏறி வந்த ஏணி. இந்த கட்சியை ஏற்றி விட்டது யாரு ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…  அம்மா இல்லைனா பாமக என்ற  கட்சியே வெளியே தெரியாது.

அம்மா கூட்டணி வச்சு தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்னாடி அங்கீகாரமே கிடையாது. 1991 சட்டமன்ற தேர்தலில் பாமக எத்தனை சீட்டு வந்தது ? ஒரு சீட்டு வந்தது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் நிக்குறாங்க. ஒரு சீட்டாவது ஜெயிக்க முடிந்ததா ? ஒரு சீட்டும் ஜெயிக்க முடியல.

திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் நினைத்து பார்க்கவேண்டும். 1998இல் அம்மாவுடைய கூட்டணி வந்த பிறகுதான்,  5 சீட்டு கொடுக்குறாங்க. அதுல 4 வராங்க. அதுல நாலு சீட் வராங்க. அப்போ 5ல  நாலு ஜெயிச்சதனால தான் அந்தக் கட்சிக்கே  இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தது. இல்லையென்றால்  அங்கீகாரம் கிடைக்குமா ? இப்படி எல்லாம் வந்து நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் பேசினால்  தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர் மட்டுமல்ல, உங்கள் பக்கத்தில் இருக்கிற தொண்டர் கூட உங்களை மதிக்க மாட்டாங்க என தெரிவித்தார்.