அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் கொல்கத்தா…. 6 ஓவர் முடிவில் 29/4..!!

கொல்கத்தா அணி 6 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 29 ரன்களுடன் விளையாடி வருகிறது 

ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.

முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் கிறிஸ் லின் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து  ஹர்பஜன் வீசிய 2வது ஒவ் ஓவரில்  சுனில் நரேன் 6  ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த நிதிஸ் ராணா 0 ரன்னில்  3 ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் ராபின் உத்தப்பாவும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். தற்போது  தினேஷ் கார்த்திக்கும், சுப்மன் கில்லும்   விளையாடி வருகின்றனர்.