சொதப்பிய கொல்கத்தா…. ரன் குவிக்க திணறிய உத்தப்பா….மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு.!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி மும்பை  வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர்.

Image

தொடக்கத்தில் லின் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு கில் 9 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்து வீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லின்னும் 41 (29) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ராபின் உத்தப்பாவும், தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்தனர். உத்தப்பா ஆமை வேகத்தில் ரன்கள் எடுத்து வந்தார்.

Image

அதன் பின் மலிங்கா வீசிய 13வது ஓவரின்  4வது பந்தில் தினேஷ் கார்த்திக் 3 ரன்னில் ஆட்டமிழக்க 5வது பந்தில் ஆண்ட்ரே ரஸெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆறுதல் அளிக்கும் வகையில் நித்திஷ் ராணா அதிரடியாக விளையாடி 26 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரும் உத்தப்பா ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

Image

இறுதியில்  பும்ரா வீசிய  கடைசி ஓவரில் 5வது பந்தில் உத்தப்பா 40 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. ரிங்கு சிங் 4 ரன்களும், நரேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 3 விக்கெட்டுகளும், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 134 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.