“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு கொச்சையான படம்”….. இதை தேர்வு செய்தது சரிகிடையாது…. சர்வதேச திரைப்பட தேர்வுக்குழு தலைவரின் அதிர்ச்சி கருத்து….!!!!!

கோவாவில் உள்ள பானாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழா 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், 79 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜெய் பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்களும் அடங்கும். இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லிபிட் பேசினார். அவர் பேசியதாவது, 15-வது திரைப்படமாக திரையிடப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

இது பரப்புரை நோக்கம் கொண்ட ஒரு கொச்சையான திரைப்படம். அப்படித்தான் எங்களுக்கு தோன்றுகிறது. இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படிப்பட்ட படங்கள் தேர்வுக்கு வந்தது சரி அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் உள்ள விமர்சனம் குறித்து ஆலோசிப்பது தான் திரைப்பட விழாவின் ஆன்மா. மேலும் இது போன்ற மேடையில் என்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறுவதில் நான் வசதியாக உணர்கிறேன் என்று கூறினார்.