“காஷ்மீர் விவகாரம்” இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை…. பாக் பிரதமர் கருத்து…!!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்து கூறியது. எனினும் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருகிறது.

Image result for இம்ரான்கான்

இதற்கு இடையில் அமைதி நிலவ இந்தியா பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் வரை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு  முன்பு இருந்ததை விட சற்று தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.