அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே சாதனை படைத்த ஹூன்டாய் நிறுவனம்….!!!

அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம்.

இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hyundai Venue

முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Image result for HYUNDAI VENUE

i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் இந்த ஹூன்டாய் வென்யூ காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலம் 83 BHB பவர், 115 NM டார்க்.5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் இதனோடு வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் 89 BHB பவர், 220 NM டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.