அதிமுகவின் நேர்காணல் நடைபெற்று வருகின்றது….!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10_ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது . மேலும் அதிமுக தொண்டர்கள் விருப்பத்தால் விருப்ப மனுவின்  இறுதிநாள் பிப்ரவரி 14_ஆம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டது .அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சுமார் 1,836 பேர் விருப்ப மனு அளித்தனர் .மேலும்  விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றும் , நாளையும் ( 11 , 12 ) ஆகிய தேதிகளில்  நடைபெறுமென்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் காலை மற்றும் மாலை என நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை நடைபெறும் நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கும்  , இன்று  மாலை 3 மணிக்கு இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , மதுரை ,  தேனி , சிவகங்கை , ராமநாதபுரம் ,  தூத்துக்குடி,  சிவகாசி திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய பத்து தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகின்றது.
 
அதே போல 2-வது நாளான நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் திருவள்ளூர் , சென்னை  வடசென்னை , சென்னை மேற்கு , சென்னை தெற்கு , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , அரக்கோணம் , வேலூர் , கிருஷ்ணகிரி  மற்றும் தர்மபுரி  தொகுதிக்கும் , இன்று மாலை ஆரணி , திருச்சி , பெரம்பலூர் , திருவண்ணாமலை , கடலூர் , சிதம்பரம் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஒன்பது தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .