இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டும்!! “2019 உலகக் கோப்பையில் ஆஸி, கடும் சவாலாக இருக்கும்”-முன்னாள் வீரர்!! 

இந்திய அணி  விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது என முன்னாள் வீரர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் 2019 உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியபோது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி, இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தி சென்றுள்ளதாக கங்குலி தெரிவித்தார்.

Related image

மேலும், இப்போதைய ஆஸ்திரேலிய அணியானது பழைய ஆஸ்திரேலிய அணியை நினைவுபடுத்துவதாக, அதாவது வலுவான நிலையில் உள்ளதாக  கூறிய கங்குலி, வரவிருக்கும் 2019 உலகக் கோப்பை போட்டியில் மற்ற அணிகளுக்கு ஆஸ்திரேலிய அணி  கடும் சவாலான ஓர் அணியாக திகழும்  எனவும் தெரிவித்தார்.