பாட்டியைப் பார்க்க சென்றபோது… சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5), சிறுமி 4 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, “நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மாலை 17 வயது சிறுமி, தன்னுடைய தாய்வழி பாட்டியைப் பார்ப்பதற்கு மாவ்வில் இருந்து ராஸ்டா இரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அந்தசிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 நபர்கள், அவரை ஒரு ரிக்ஷாவில் அமரும்படி மிரட்டி கூறியுள்ளனர்.

பின்னர், அவர்கள் நால்வரும் ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து சிறுமி வலியால் அலறி துடித்துள்ளார்.. இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள சிலர் காவல் துறைக்குத் தகவல்அளித்தனர்.

பின்னர் அந்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார்  கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் 25ல் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமியின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் சமீபத்திய நாட்களாக அதிகளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *