மனிஷ் பாண்டே அதிரடி….. ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு..!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 160 ரன்கள்  குவித்துள்ளது 

ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.

Image

கேன் வில்லியம்சன் 13 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார். இதையடுத்து   மனிஷ் பாண்டேவும், டேவிட் வார்னரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடினார். அதன் பின் இந்த ஜோடி பிரிந்தது டேவிட் வார்னர் 37 (32 )  ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 12.1 ஓவரில் 102/2 ரன்களில் இருந்தது. அதை தொடர்ந்து மனிஷ் பாண்டேவும் 61 (36) ரன்களில் ஷ்ரேயஸ் கோபால் சுழலில் சாம்சன் வசம் பிடிபட்டார்.

Image

இதையடுத்து வந்த வீரர்கள் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கடைசியில் ரஷித் கான் 17 (8) ரன்கள் அடிக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி  8 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் வருண் ஆரோன், ஓசேன் தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 161 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது..