வார்னர் அதிரடி…. ஹைதராபாத் 212 ரன்கள் குவிப்பு!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், விருத்திமான் சாஹாவும் களமிறங்கினர்.

Image

இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதன் பிறகு சாஹா 28 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மனிஷ் பாண்டேவும், வார்னரும் அதிரடியை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய வார்னர் அரைசதம் கடந்தார்.அதன் பின் மனிஷ் பாண்டே 36 (25) ரன்கள் , வார்னர் 81 (56) ரன்கள்( 7 பவுண்டரி, 2 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தனர்.

Image

கடைசியில் அதிரடியாக மொஹம்மது நபி 20 (10) ரன்களும், கேன் வில்லியம்சன் 14 (7)  ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் மொஹம்மது சமி, ஆர். அஷ்வின்  தலா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஷ்வின் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  பின்னர் 213 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கேஎல் ராகுலும் களமிறங்கினர்.

Image

கெய்ல்4 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேஎல் ராகுலும், மயங் அகர்வாலும் இணைந்தனர். ராகுல் 34* (31) ரன்களுடனும், அகர்வால் 20* (15) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது பஞ்சாப் அணி 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து  63 ரன்களுடன் விளையாடி வருகிறது.