ஈரோடு அருகே தனது மரணத்திற்கு கணவர் தான் காரணம் என்று தாய்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை அடுத்த நஞ்சனபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கும் ஆர்எஸ் குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சத்யா அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இருக்க நேற்று அதிகாலை தனது தாயார் செல்லுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எனது சாவுக்கு எனது கணவர் தான் காரணம் என்று அனுப்பியிருந்தார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன் மருமகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சத்யா பரிதாபமாக இறந்து கிடந்தாள். இதை கண்டதும் அவரது உறவினர்கள் சத்யாவின் உடலை கட்டியணைத்து கதறி அழுதனர்.
அப்போது சதீஷின் உறவினர்கள் சத்திய தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து இன்று காலை உடலை வாங்க வருமாறு சத்யாவின் உறவினர்களை அழைக்க அவர்கள் உடலை வாங்க மறுத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.