உத்தர பிரதேச மாநிலம் கடந்த சனிக்கிழமை அன்று அஜய் சிங் ஓட்டி சென்ற கார் கத்ரா-ஷாபஸ்பூர் ரயில்வே கிராசிங்கின் குறுக்கே அதிவேகமாக சென்றது. கேட் மூடும் நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், குறுக்கு தண்டவாளத்தில் கவிழ்ந்தது. சாலையில் சுமார் 100 மீட்டர் பயணம் செய்த பிறகு, கார் இறுதியாக நின்றது. இதற்கிடையில் கோரக்பூர் – லக்னோ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வேறு பாதையில் இயக்கப்பட்டது.

காரை தூரத்தில் இருந்து பார்த்த ரயில் டிரைவர் மோதுவதற்கு சற்று முன் ரயிலின் அவசரப் பிரேக்கை நிறுத்தினார். அதன் பிறகு இதுகுறித்து கேட் கீப்பர் ராஜ் கிஷோர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த அவர்கள், காரை கிரேன் மூலம் தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.