அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் பெர்லிங்டன் பகுதியில் தேவாலயம் மைந்துள்ளது. தேவாலயத்தில் எதிர்பாரா விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீயால் நியூ ஜெர்சி மாகாணமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.