ஆளுநர் பங்களாவை நூலகமாக்க வேண்டும்… ஆர்.என் ரவியை கொஞ்சம் தள்ளியே வைக்கணும்.. கரு.பழனியப்பன் அதிரடி

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கரு.பழனியப்பன், அவர் கருத்து அவருக்கு. என் கருத்து எனக்கு. வாங்க உக்காந்து பேசுவோம். நீங்க வாங்க உட்கார்ந்து பேசுவோம் என்று கூப்பிட்டு எவன் வரலையோ, அவன் புறம்தள்ளப்பட வேண்டியவன். அவன் எதையுமே கேட்க தயாராக இல்லை. அவனால் சமூகத்துக்கு பயனில்லை. சோசியல் மீடியாவில் நீ ஒரு கருத்து சொன்னீங்கன்னா…  கமெண்ட்ல மூணாவது கமெண்ட் உங்கள் வீட்டு பெண்ணை பத்தி பேச ஆரம்பிச்சுருவான். நான் ஒரு கருத்து சொல்றேன்.

அதுக்கு ஒரு கருத்து சொல்றா அப்படின்னா…  இவனுக்கு கருத்து சொல்ல தெரியாது. அவனுக்கு பழக்கம் இல்லை. அய்யயோ சம்மந்தப்பட்ட ஆள் சொல்லுறானே.. இது தப்பா தான் இருக்கும் என முடிவுக்கு எடுத்துகிறான். நாம் அவனை எப்படி தெரிஞ்சுகிறது ? தமிழகம், தமிழ்நாடு மாதிரி தெரிஞ்சுக்கணும்.  சொல்லுற சொல்லுல தெரிஞ்சுரும் ஆள் யாருன்னு ?

ஓஹோ.. இது அவரா ? அவரை கொஞ்சம் தள்ளி உக்கார சொல்லு. இந்த கைக்கு எட்டுற தூரத்துல தான் இருக்கு. வெளியே அனுப்பிவிட்டால், அவ்வளவு பெரிய மைதானத்துல… மான்குட்டி விளையாடுற இடத்துல ஒரு பெரிய நூலகம் இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க. அடுத்த தலைமுறையே சிறப்ப இருந்து இருக்கும். அவ்வளவு பெரிய இடம். அவரு சும்மாதான் இருக்காரு. அவருக்கு ஒண்ணுமே வேலை இல்லை.

ஆன்லைன் ரம்மியை எதிர்த்து தமிழக அரசு சட்டம் இயற்றுமாம்,அதை கையெழுத்து போட்டு அனுப்ப மாட்டாராம். ஆனால் தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லணுமாம்.நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வேளை பார்த்து வைத்திருப்போம். நீங்க   வந்து அதற்கு பெயர் வைப்பீர்களா ? உங்களுக்கு நாட்டில் பேசாமல் இருப்பதால் தான் ரொம்ப பேரு புத்திசாலி மாதிரி தெரியுறான் என தெரிவித்தார்.

Leave a Reply