“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் பாலமாக செயல்படுவார்” ஓம் பிர்லா குறித்து மோடி புகழாரம் …!!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஓம் பிர்லா மோடி க்கான பட முடிவு

இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களவை உறுப்பினர்கள் MP_யாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று 3 நாளாக நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை  அனைத்து கட்சிகளும் ஆதரித்ததையடுத்து அவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து  பேசிய பிரதமர் மோடி , ஓம் பிர்லா மாணவர் பருவம் முதல் சமூக பணியில் ஈடுபட்டவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார். ஓய்வின்றி எப்பொழுதும் மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம் பிர்லா என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.