தங்கம் படுத்தும் பாடு…. ”காலை உயர்வு, மாலை சரிவு” குழம்பும் மக்கள்…!!

இன்று காலை உயர்ந்த தங்கத்தின் விலை மாலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை மீண்டும் உயர்ந்து , தற்போது குறைந்துள்ளது. இதனால் காலை சவரன் 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது 29,000த்துக்கு சற்றும் கீழே குறைந்துள்ளது.

மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 6 ரூபாய்யும் ,  சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3, 620_க்கும் , ஒரு சவரன்  28,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.காலை உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளதால் பொதுமக்கள் குழப்பம்  அடைந்துள்ளனர்.