ஜார்ஜியாவின் திபிலிசியில் பகுதியில் 27 வயதான ரஷ்ய டிக்டோக்கரான அரினா கிளாசுனோவா என்ற பெண் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் டிக்டாக் செய்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதன் பின் சிறிது நேரம் கழித்து அந்த பெண் தனது நண்பரின் கையில் இருந்த போனை வாங்கி, தனது நண்பரை வீடியோ பதிவு செய்தார்.

அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவர் சாலையில் இருந்து மெட்ரோ நிலையத்தின் சுரங்கப்பாதை படிக்கட்டில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு அவரது கழுத்து உடைந்தது. இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.