இங்கிலாந்தில் “115 அடி உயரம்”… பிரம்மாண்ட கண்ணாடி நீச்சல் குளம்… எதிர்பார்ப்பில் மக்கள்.!!

இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில்  115 அடி உயரத்தில் பிரம்மாண்ட   நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது. 

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமெரிக்க  தூதரகத்தின் அருகில் இருக்கும் இரண்டு கட்டடங்களின் உச்சத்தில் நடுவே  சுமார் 115 அடி உயரத்தில்  நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தினை கடின அழுத்தம் மற்றும் பாரம் தாங்கும் அதிக தடிமனான கண்ணாடியின்  மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீச்சல் குளம்  கட்டப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தின் போது திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image result for Stunning images of the world's first sky pool 'floating' 115 feet

இந்த நீச்சல் குளமானது 25 மீட்டர் நீளம்,  5 மீட்டர் அகலம்  மற்றும் 3 மீட்டர் ஆழம் கொண்ட அளவிலும் கட்டப்பட்டு வருகின்றது. இதில் குளிப்பவர்களும்,  மற்றவர்களும் மிக தெளிவாக பார்க்கும் வகையிலான  விலை உயர்ந்த கண்ணாடி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் குளிக்க மக்கள் தயாராகவும், ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.