எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த பரிதாபம் …

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே  எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது  இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும்   உடல்  கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

gas cylinder blast  க்கான பட முடிவு

பின்பு இவர்களின் உடல்   சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக எடுத்துச் செல்லப்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.