தமிழகத்தின் வருங்கால முதல்வரே!.. மக்களின் தளபதியே!…. பதவி பிரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்…. அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக  வலம் வரும் விஜய் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தேனி மாவட்டம் செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ள சத்தியாகிரக சேவா கோவிலில் தளபதி விஜய் சினிமா துறையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ததோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கியுள்ளனர்.

அதன் பிறகு தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தளபதி விஜய் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நாளைய முதல்வரே, தமிழகத்த்தின் தளபதியே போன்ற வாசகங்கள் இருக்கிறது. அதன்பிறகு தளபதி விஜய் முதல்வர் என்றும், புஸ்லி ஆனந்த் அமைச்சர் என்றும் பாண்டி நாளைய சட்டமன்ற உறுப்பினர் என்றும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அதை நிரப்புவதற்கு வாருங்கள் என்று தளபதி விஜயிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மேலும் இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என்றெல்லாம் போஸ்டர் அடித்து விஜய் ரசிகர்கள் தேனி மாவட்டம் முழுதும் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.