“முன்பகை” எங்கள வெட்டிட்டாங்க….. அரிவாளுடன் காவல்நிலையம் சென்ற பெண்…… கோவையில் பரபரப்பு….!!

கோவை அருகே காவல் நிலையத்திற்குள் பெண் அரிவாளுடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சா. இவரது மனைவி கனகா. இருவரும் அதே பகுதியில் கூலி தொழிலாளர்களாக  பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு கனகா கையில் அரிவாளுடன் காவல் நிலையம் வருகை தந்தார்.

அவரது கணவரும் கிழிந்த சட்டை, ஆங்காங்கே வெட்டுக்காயங்களுடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பின் ஒரு பெண் கையில் ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் உள்ளே வருவதை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்குள் செல்ல அவருக்கு வழிவிட்டனர்.

பின் அவர்களை காவல் நிலையம் உள்ளே வரவிடாமல் தடுத்த  அதிகாரிகள் கையிலிருக்கும் அரிவாளை பிடுங்கி விசாரித்ததில், எங்களது பக்கத்து வீட்டில் இருக்கும் நபருக்கும், எங்களுக்கும் முன்பகை இருந்து வர நேற்று சின்ன வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்கள். இதனை தட்டிக்கேட்ட எனது கணவரையும் அரிவாளால் வெட்டி விட்டார்கள். பின் அவரது கையில் இருந்த அரிவாளை பிடுங்கிக்கொண்டு வந்து புகார் அளிக்க வந்துள்ளோம் நீங்கள் தான் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் அதன் பின்பு வந்து புகார் அளியுங்கள் என்று தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.