“கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை நேரில் சந்தித்து நலம் விசாரித்த இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்”…. வைரலாகும் புகைப்படம்‌‌..!!

இந்திய கிரிக்கெட் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு செல்லும் வழியில் ரூர்கி என்ற இடத்தில் ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரிஷப் பண்ட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது வீட்டில் சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பண்ட்டை அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் உடன் இருந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

அவருடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ரிஷப் பண்டை தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், ரெய்னா, ஸ்ரீசாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இவர்கள் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.