சென்னையை விட… “இந்த இடத்தில் டெல்லி ஸ்ட்ராங்”… கடைசியில அடிக்கவும் ஆள் இருக்கு… கணித்து சொன்ன சோப்ரா..!!

டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்..

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்..

ஆகவே எந்த அணியில் சுழற்பந்து பந்துவீச்சாளர்கள் பலமாக இருக்கிறார்களோ அந்த அணி போட்டியை வெல்லும் என்று சொல்லப்படுகிறது.. அதே நேரத்தில் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.. குறிப்பாக சென்னை அணி ஆண்டுதோறும் நல்ல சுழல்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கும்.. ஆனால் இந்த முறை சென்னை அணியை விட சுழற்பந்து வீச்சில் டெல்லி அணி வலுவாக இருக்கிறது.. ஆம், டெல்லி அணி தான் மிகச் சிறந்தது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்..

இது பற்றி அவர் பேசுகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை டெல்லி அணி மிகச் சிறந்த அணியாக இருக்கின்றது.. இந்திய வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.. தொடக்க வீரர்களுக்கு பஞ்சமே கிடையாது.. கடைசியாக இறங்கி அதிரடி காட்டுவதற்கு பல ஆண்டுகளாக டெல்லி அணியில் ஆள் இல்லாமல் இருந்தது.. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட் மயர் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கின்றனர்.. இதனால் இந்த இடத்தில் கவலையில்லை..

சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, சந்தீப் லாமிச்சானே மற்றும் அக்சர் படேல் போன்ற மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.. இவர்கள் மூவருமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவார்கள்.. இதனால் டெல்லி அணி மிகச் சிறந்த பலம் பொருந்திய அணியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *