நமக்கு தெரியாத காடா…? வாங்க போகலாம்….. 3 பேர் கைது….. ரூ85,000 அபராதம்…..!!

உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் சென்ற மூன்று ஜீப்  ஓட்டுனர்களிடம் ரூபாய் 85 ஆயிரம் அபராதம் வனத்துறையினரால் வசூலிக்கப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் முதுமலை சரணாலயத்தில் காட்டுப்பகுதியை கரைத்துக் குடித்த 3ஜிப் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளை அனுமதி இல்லாமால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றி காட்டியதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.

இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் வனப்பகுதிக்குள் வைத்து கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து ஜீப்பை பறிமுதல் செய்த அவர்கள், அவர்களிடமிருந்து ரூபாய் 85 ஆயிரம் அபராத தொகை வசூலித்து பின்பு விடுதலை செய்ததாக கூறப்படுகிறது.