விறுவிறுப்பாக முடிந்தது முதல் கட்ட வாக்குப்பதிவு……!!

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில்  91 தொகுதிகளுக்கு நேற்று விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.

 

 

அந்த வகையில் ,  ஆந்திரா மாநிலம் 25 தொகுதிகள் , அருணாசலபிரதேசம் 2 தொகுதிகள், அசாம் 5 தொகுதிகள், பீகார் 4 தொகுதிகள் , சத்தீஷ்கார் 1 தொகுதிகள் , காஷ்மீர் 2 தொகுதிகள் , மராட்டியம் 7 தொகுதிகள் , மணிப்பூர் 1 தொகுதிகள் , மேகாலயா 2 தொகுதிகள், மிசோரம் 1 தொகுதிகள், நாகலாந்து 1 தொகுதிகள், , ஒடிசா  4 தொகுதிகள், சிக்கிம் 1 தொகுதிகள், தெலுங்கானா 17 தொகுதிகள், திரிபுரா  1 தொகுதிகள், உத்தரபிரதேசம்  8 தொகுதிகள் , உத்தரகாண்ட் 5 தொகுதிகள், மேற்கு வங்காளம் 2 தொகுதிகள், லட்சத்தீவுகள்  1 தொகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் 1 தொகுதிகள் என மொத்தம் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடந்தது.

முதல் கட்ட வாக்குப்பதிவு க்கான பட முடிவு

மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய  4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற 91 தொகுதிகளில் மொத்தம் 1,279 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர் , 14 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதியில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து சென்றனர்.