நாட்டின் மிகப் பெரிய நெருப்புக் குழி……முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிப்பு…!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய வட்ட வடிவ  நெருப்புக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள காரகும் என்ற பாலைவனத்தில் (Karakum Desert) மிகப்பெரிய வட்ட வடிவில் நெருப்புக்குழி ஓன்று உள்ளது. இந்த மிகப்பெரிய நெருப்புக்குழி இயற்கையாகயில்  உருவான ஒன்றாகும். இது சுமார் 70 மீட்டர் சுற்றளவும், 30 மீட்டர் ஆழமும் கொண்டதாகும்.  இந்த நெருப்புக் குழியின் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது. சுற்றளவு, ஆழம், வெப்பநிலை அனைத்தின் காரணமாகவே இந்த நெருப்புக் குழிக்கு “நரகத்தின் கதவு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

Image result for Pictures has captured incredible views over the apocalyptic Darvaza crater, a flame pit in the middle of the Karakum Desert in ...

இந்நிலையில் இந்த மரண நெருப்புக் குழியின் முழுஅளவையும்  விஞ்ஞானிகள் பார்க்க  விரும்பினார்கள்.  இதன் காரணமாக விஞ்ஞானிகள் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம் அந்த எரிவாயு நெருப்புக்குழியை  படம் பிடித்துக் கட்டியுள்ளனர். அதில் ஆங்காங்கே பற்றி எரியும் பாறைகளும், கொளுந்து விட்டு எரியும் நெருப்பும் என அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நெருப்புக்குழியை காண்பதற்கு பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் காண வருகின்றனர். இது அந்நாட்டின் விசித்திரமாக கருதப்படுகிறது.