கோடையில் கோலாகலத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா…!!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா  நடைபெறும் நாட்களில்   தினமும் ஒவ்வொரு சமுதாயதினர்  சார்பில்  சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது  நாளில்  கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து  , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை  திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர்.

மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகிய பூஜைகளை நடைப்பெற்றதை அடுத்து உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷகம் செய்து , அம்பாளுக்கு மஞ்சள் குத்தி தீர்த்த திருக்குளத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  மாலையில் தீபாராதனை சடங்கும் , இரவில் அம்மனுக்கு யானை மற்றும் அன்ன வாகனத்தில் வீ தியுலாவும்,சாமத்தில் அம்மனுக்கு  ரிஷப வாகனத்தில் வீதியுலா சடங்குகளும்  முடிந்தது. இதையடுத்து, திங்கள் இன்று இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *