ஊழியர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம் – அதிரடியாக நீக்கப்பட்ட 7ஆயிரம் ஊழியர்கள்..!!!

டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாததாலும் செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நிறுவனமே மறு சீர் அமைப்பின் ஒரு பகுதியாக 7000 பணியிடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளோம் என டிஸ்னி நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.