ரஷ்ய நாட்டில் பிரபல நடிகையான கெமில்லா பெல்யாஸ்டாக்யா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது காதலனுடன் தாய்லாந்தில் உள்ள கோசியா மியூய் தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள கடற்கரையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து, கண்களை மூடி யோகா செய்து கொண்டிருந்தார். அப்போது கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் திடீரென ஒரு பெரிய அலை கரைக்கு வந்து, யோகா செய்து கொண்டிருந்த அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அப்போது அவர் கடலுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்க யாரும் இல்லாததால் கடலில் மூழ்கினார். அதன் பிறகு மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் தேடுதலை நிறுத்திவிட்டனர். சிறு நிமிடங்களுக்குப் பிறகு அவரது  உடல் கரை ஒதுங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.